வியாழன், 9 மார்ச், 2023

love and ego conflict

 

ஈகோவும் அன்பும்

Love and Ego conflict

 

ஈகோவிற்கும் அன்பிற்கும்

ஓர் கலந்துரையாடல்

நீ பெரியவனா (ளா)…?

நான் பெரியவனா (ளா)…?

ஈகோவும் அன்பும்.

நீயே

பெரியவனா (ளா)ய்

இருந்துவிட்டுப்போ…!

என்றது

அன்பும் பாசமும்.

 

அகந்தையும்

அகங்காரமும்

ஆட்டம்போடுகின்றது

அன்பும் பாசமும்

நிலைகுழைந்து போய்

நிற்கின்றது…!

 

ஈகோ

நான்தான் பெரியவன் (ள்)

நானே பெரியவன் (ள்)

“நான் மட்டுமே

பெரியவன் (ள்)“

அகந்தையோ

ஆடாத  ஆட்டம்

எல்லாம்

ஆடிக்கொண்டே

இருப்பேன்

என்கிறது…! 

 

அன்பு

நீ ஆடு

ஆடிக்கொண்டேயிரு

எவ்வளவு

வேண்டுமானாலும்

ஆடு…!

நான்

அமைதியாகத்தான்

இருப்பேன்

நீ ஆடும் ஆட்டம்

சில காலம் தான்…!

 

ஈகோ உரைத்தது

என்னிடமோ

அகங்காரம்

ஆணவம்

அதீத கோபம்

தலைக்கணம்

பணிவின்மை

செருக்கு

திமிர்

இவற்றை

எல்லாம் வைத்தே…

எனக்குத்

தேவையானதை

சாதித்துக்கொள்வேன்.

 

என்னிடம்

இருப்பதுவோ

மிருகத்தனம்

மட்டுமே.

யாரையும்

மதிக்கவே மாட்டேன்.

மாறாக

மிதிக்கவே செய்வேன்.

 

அன்போ

வினவும்பொழுது

என்னிடம் இருப்பதோ

பொறுமை நிதானம்

விவேகம் தியாகம்

பணிவு விட்டுக்கொடுத்தல்

இவைகள் எல்லாமே

என் உடன்பிறப்புகள்.

இவைகள் எல்லாமே

நான் விரும்பியதை

விரும்பிய நேரத்தில்

எந்த ஓரு சிக்கலும் இல்லாமல்

மனமுவந்து தானாகவே கொடுக்கும்.

 

மனிதனை

மனிதனாக பார்ப்பேன்

யாரையும் மிதிக்க மாட்டேன்

மாறாக அவர்களுக்கு

உரித்தான மரியாதை மட்டுமே

வழங்குவேன்.

 

ஈகோ சொல்லியது

எல்லோரையும்

வீழ்த்த நினைப்பேன்

எனக்கு

உறவுகளின்

அருமை தெரியாது

தெரியவேண்டிய

அவசியமும் இல்லை

என்பாதை

ஒரு வழிப்பாதையில்

குறுக்குப்பாதையே…!

 

அன்போ

”எனக்கு

எல்லோரும்

வேண்டும்

யாரையும் வீழ்த்தும்

நோக்கமல்ல”

உறவுகளின்

அருமை புரிந்ததால்

அவர்களை

நேசிக்கின்றேன்.

 

என்பாதையோ

பரந்து பட்ட பாதை

யார் வேண்டுமானாலும்

வரலாம் போலாம்

தடைகள் ஏதும் கிடையாது…!

 

ஈகோ

அவனி (ளி)டம்

இவனி (ளி)டம்

சொல்லவேண்டுமா…

வேண்டாம்

வேண்டாம்

அவனெ (ளெ)ல்லாம்

ஒரு ஆளேயில்ல…

 

அன்போ

அனைவரிடம்

அனைத்தும்

சொல்லி

அனைவரையும்

அரவணைக்கும்

ஓர்

அட்சயபாத்திரம்…!

 

ஈகோ

தனியே

நின்றுகொள்ளும்

தனிமரமாய்

தனியாளாய்

சிந்திக்கத்

திறனில்லாத

மூடனாய்…!

 

அன்போ

கூட்டம் கூட்டமாக

நின்றுகொள்ளும்

பலமரங்கள்

நிறைந்த தோப்பாய்

சிந்திக்க நிறைந்த

மாமேதையாய்.

 

ஈகோ சொல்லியது

நான் எதையும்

வெளிப்படையாக

செய்யமாட்டேன்.

மறைத்து மறைத்து தான்

செய்வேன்.

அப்படி செய்வதில்

 பெரும்பாலும்

பிறருக்கு

ஏமாற்றமும் துரோகமும்

கலந்தே இருக்கும்.

இந்நிலையில்

உறவுகள் அனைத்துமே

அலட்சியமாகத் தான்

பார்க்கப்படும்.

 

அன்பு உரைக்கும் பொழுது

நான் எல்லோரிடமும்

வெளிப்படையாகவே

இருப்பேன்.

பெரும்பாலும்

நன்மை மட்டுமே

செய்வேன்.

உறவுகள் அனைத்துமே

அரவணைத்தே செல்வேன்.

ஈகோ வினவியது

நான் பிறருக்கு

கட்டையிடுவேன்.

அதவாது

எனக்கு

பிடிக்கவில்லை

என்றால்…

நானும் பேசமாட்டேன்

என்னுடன் இருக்கும்

நபர்களை

மற்றவர்களிடம் பேச

அனுமதிக்க மாட்டேன்.

 

அன்பு

எடுத்துரைக்கும் பொழுது

நான் யாருக்கும்

கட்டையிடுவதில்லை

அவரவர்

விருப்பம் போல் இருக்கலாம்.

 தனக்குப் பிடிக்காதவர்களிடமும்

உரையாடுவேன்.

யாருடைய

கட்டளைக்கும்

அடிபணியேன்…!

நான்

ஒரு சுதந்திர பறவையாய்

சமதானத்தை

முன்னெடுத்து

வலம் வருகின்றேன்…!

 

ஈகோ

நான் ஏதாவது

ஒன்றை பெறவேண்டும்

நினைத்துவிட்டால்

அதை அடைவதற்காக…

நான் பிணக்கம்

கொள்வேன்,

சண்டையிடுவேன்,

அழுது புரளுவேன்

முரட்டுத்தனத்தோடு

மூர்க்கத்தனத்தோடு

நடந்து கொள்வேன்

இறுதியில்

அதையே

அடைந்தே தீருவேன்…!

 

அன்பு

நான் ஏதாவது ஒன்றை

பெறவேண்டுமென்றால்

யாரிடமும்

பிணக்கமோ

சண்டையிடவோ

அழுது புரளவோ

முரட்டுத்தனமாகவோ

மூர்க்கத்தனத்தோடவோ

நடந்துகொள்ள

இயலமாட்டேன்

பொறுமையோடும்

நிதானத்தோடும்

விவேகத்தோடும்

அமைதியான முறையில்

அடையவேண்டிய

ஒன்றை அனைவரின்

ஆதரவோடு

அடைவேன்….!

 

ஈகோ

நான் எல்லோரையும்

அடிப்பேன்

உதைப்பேன்

கையில் கிடைக்கும்

பொருளெல்லாம்

உடைப்பேன்

பிறரின் மனங்களை

காயப்படுத்துவேன்

குத்துவேன் குடைவேன்

துன்பத்தில் துவளவைப்பேன்

அதிகாரத்தில் அதிரவைப்பேன்

என்னை சார்ந்த அனைவரையும்

அழவைப்பேன்…!

 

அன்பு

நான் எல்லோரையும்

சிரிக்க வைப்பேன்

சிந்திக்க வைப்பேன்

அழுபவர்களையும்

துன்பத்தில்

துவளுபவர்களையும்

கட்டிப்பிடித்து

ஆரத்தழுவேன்.

ஆறுதல் மொழி

உரைப்பேன்.

 

ஈகோ

எனக்கு

தாயும் தெரியாது

தந்தையும் தெரியாது

அண்ணனும் தெரியாது

தம்பியும் தெரியாது

அக்காளும் தெரியாது

தங்கையும் தெரியாது

உறவுகள் யாரென்பதே

யாரையும் தெரியாது

அதன் மகத்துவத்தும்

என்ன என்பதே தெரியாது

எனக்குத் தெரிந்ததோ

நான் நான் நான்

நான் மட்டுமே

நான் மட்டுமே தான்

சொன்னால் புரியாதா

சொல்லுறேன் புரிஞ்சுக்கோ

எப்பொழுதும்

நான் நான் நான் மட்டுமே தான்

என்றெல்லாம் வாதாடுவேன்…!

 

அன்பு

எனக்கு

தாயும் தெரியும்

தந்தையும் தெரியும்

அண்ணனும் தெரியும்

தம்பியும் தெரியும்

அக்காளும் தெரியும்

தங்கையும் தெரியும்

உறவுகள் அனைவரையும்

அவர்களின் மகத்துவத்தும்

என்னவென்பதும் தெரியும்

எனக்குத் தெரிந்த

என் அகராதியில்

நான் என்பது கிடையாது

நாம்  நாங்கள் மட்டுமே.

 

ஈகோ

நான் ஒவ்வொன்றையும்

வெவ்வேறு கோணங்களில்

ஆராய்வேன்

அவ் ஆராய்வும்

என் விருப்பம் போலவே

எல்லாம் நடக்கும் நடக்கனும்

நடந்தே தீரும்…!

 

 

 

அன்பு

நான் ஒவ்வொன்றையும்

வெவ்வேறு கோணங்களில்

ஆராயமாட்டேன்.

அவரவர் விருப்பம் போல்

எல்லாமே நடக்கும்.

 

ஈகோ

என் தேவைகளுக்கு

ஏற்ப என் முடிவுகளை

மாற்றிக்கொண்டே இருப்பேன்.

என்னை சார்ந்த அனைவரையும்

நிலைகுழையச் செய்வேன்

நிம்மதி என்பதையே

இல்லாமல் ஆக்கிவிடுவேன்.

 

அன்பு

நான் தேவைகளுக்கு

ஏற்ப என் முடிவுகளை

மாற்றுவதில்லை.

பிறரின் மனதை அறிந்துகொண்டு

அனைவரின் மனதில்

நிம்மதி ஒன்றை மட்டுமே

விதைப்பேன்.

 

ஈகோ

என் வளர்ச்சிக்கு இடையூராக

இருப்பவர்களை எல்லாம்

திட்டமிட்டு அழித்துவிடுவேன்.

யாரையும் அவ்வளவு

எளிதாக வளரவிடமாட்டேன்.

என் தனிப்பட்ட

வளர்ச்சியை நோக்கியே செல்வேன்.

என் செயல்பாடு என்

சுயநலம் மட்டுமே.

 

அன்பு

நான் யாருடைய

வளர்ச்சியையும் தடுக்கமாட்டேன்.

நானும் வளருவேன்

என்னை சார்ந்த

அனைவரையும் வளரவிடுவேன்

வளர்த்துவிடுவேன்.

என்னிடத்தில்

சுயநலம் என்பதே கிடையாது.

 

ஈகோ

நான் தவறுகளை உருவாக்குவேன்

அத்தவறுகளையே

வேடிக்கையாய் பார்த்து

சிரிப்பேன் இரசிப்பேன்.

 

அன்பு

நான் தவறுகளை

எல்லாம் களைவேன்.

தவறுகளுக்கான

தீர்வு கூறுவேன்.

தீர்வுகளில்

பேரானந்தம் கொள்வேன்.

 

ஈகோ

நான் பணக்காரர்களை மட்டுமே

என் அருகில் வைத்திருப்பேன்.

பணம் இல்லாதவர்களை

ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன்.

பணம் இல்லை என்றால்

தாயாக இருந்தால் என்ன

தந்தையாக இருந்தால் என்ன

உடன் பிறந்த

உறவுகளாயிருந்தால் என்ன

எல்லோரையும்

தூக்கி எறிந்திடுவேன்.

அவா்களுடைய

இன்ப துன்ப தேவைகளிலும்

பங்கேற்க மாட்டேன்.

 

அன்பு

நான் ஏழை பணக்காரன்

என்ற பாகுபாடோ

வேறுபாடோ பார்பதில்லை.

அனைவரும் சமம் என்ற

நிலையிலேயே வைத்திருப்பேன்.

கூப்பிட்ட குரலுக்கு

ஓடோடி வருவேன்.

அவ்வளவு எளிதாக யாரையும்

தூக்கி எறிய மாட்டேன்.

 

ஈகோ

உன் உடனே இருப்பேன்

உன்னை கைவிடமாட்டேன்

நம்பிக்கை பொய்மொழிகள்

விதைக்கும் – ஆனால்

உடன் இருந்தே உறவாடுவேன்

உறவாடிக்கொண்டே வீழ்த்துவேன்.

அதள பாதாளத்தில் தள்ளிவிடுவேன்.

 

அன்பு

அதள பாதாளத்தில்

விழுந்தவர்களை

தூக்கிவிடுவேன்.

நம்பிக்கையான

மொழிகளை மட்டுமே

உரைப்பேன் கூறுவேன்.

உறவாடி வீழ்த்தும்

எண்ணம் எப்பொழுதும்

இல்லையே இல்லை.

 

ஈகோ

எப்பொழுதும்

நான் நானாக இருப்பதில்லை

என்னை சுற்றியிருப்பவர்களோ

என்னை இயக்குகின்றனர்.

 

அன்பு

எப்பொழுதும்

நான் நானாக இருக்கின்றேன்

என்னை சுற்றியிருப்பவர்களே – அல்லது

மற்றவர்களோ….!

இயக்குவதில்லை.

 

ஈகோ

நான் யாருடைய

உணர்வுகளையும்

துளிக்கூட மதிப்பதில்லை.

அன்பு

நான் அனைவரின்

உணர்வுகளுக்கும்

தேவைகளுக்கும்

உரிய மதிப்பளிப்பேன்.

 

ஈகோ

தெரிந்தே தவறு செய்வேன்

என்னை யாரும்

கேள்வியே கேட்கக்கூடாது.

தவறுகளையும்

திருத்திக்கொள்ள மாட்டேன்.

அறிவுரை வழங்கினால்

அவர்களை

அசிங்கமாக திட்டுவேன்

அடங்கமாட்டேன்.

 

அன்பு

தவறு என்ற தெரிந்தால்

மீண்டும் நிகழாதவாறு

பார்த்துக்கொள்வேன்.

தவறை திருத்திக்கொள்வேன்

யாருடைய மனதையும்

புண்படுத்த மாட்டேன்.

அறிவுரைகளை ஏற்பேன்.

 

ஈகோ

உயர்ந்தவர் யாரும் இருக்கக்கூடாது

பொறாமைக்குணம் மட்டுமே

என்னுள் நிலைத்திருக்கும்.

அடுத்தவரின் வளர்ச்சி

பிடிக்கவே பிடிக்காது…!

 

அன்பு

பொறாமைக் குணம்

இல்லவே இல்லை

அன்பு மட்டுமே நிறைந்திருக்கும்

பிறரின் வளர்ச்சியைக் கண்டும்

ஆனந்தமடைவேன்.

 

ஈகோ

நல்லாவே

நடிக்கத்தெரியும்.

தேவைக்கு ஏற்பவே

சிரிக்கும், அழுவும்,

மிரட்டவும் செய்வேன்.

தேவைப்பட்டால்

தன்னைத்தானே

மாய்த்துக்கொள்ளுவேன் - என்ற

கொலைமிரட்டல் விடும்.

அக்கொலைக்கும்

நீ தான் காரணம் காட்டி

பயமுறுத்துவேன்

உன்னால் தான்

நிகழ்ந்ததென்று

கட்டுக்கதைவிடுவேன்.

தனக்குள்ளே போலியான

முகமூடியை அணிந்துகொண்டு

நல்லவன் (ள்) போல்

உலா வருவேன்.

 

அன்பு

எனக்கோ

நடிக்கவே தெரியாது.

தேவைக்கு ஏற்ப

முகமூடி போடத்தெரியாது.

உள்ளது உள்ளபடியே

ஏற்றுக்கொள்ளும்

மனபக்குவத்தோடு இருப்பேன்.

யாரையும் மிரட்டவோ

காரணம் காட்டவோ மாட்டேன்.

தன்னம்பிக்கையோடு

செயல்படுவேன்.

 

ஈகோ

மற்றவர்களின் மேல்

எளிமையாக

குற்றம் சுமத்திவிடுவேன்.

அக்குற்றத்தில் அவர்கள்

மீளவே முடியாத அளவிற்கு

பழிகளையும் பழிச்சொற்களையும்

சுமத்திக்கொண்டே இருப்பேன்.

வலிகளை சுமக்கச்செய்வேன்.

வழிகளை உரைக்கமாட்டேன்.

 

அன்பு

எந்த ஒரு நபரின் மீதும்

குற்றம் சுமத்த மாட்டேன்

குற்றம் சுமத்தியவர்களையும்

காட்டிக்கொடுக்க மாட்டேன்.

பழியை தன்மேல் சுமத்திக்கொண்டு

அதன் வலிகளை

தனக்குத் தானே சுமந்துகொள்வேன்.

 

ஈகோ

நான் யாருடைய

சொல்லையும் பேச்சையும்

கேட்கவேண்டிய அவசியமில்லை…!

அதன்படி

நடக்கவேண்டும்

என்ற கட்டாயமும்

எனக்கில்லை…!

 

அன்பு

அனைவரின்

சொல்லுக்கும் பேச்சுக்கும்

மதிப்பளிப்பேன்

யாருடைய மனதையும்

காயப்படுத்தமாட்டேன்.

 

ஈகோ

நான் ஒரு

விதியை வகுப்பேன்

அதையே எல்லோரையும்

கண்டிப்போடு

பின்பற்ற செய்வேன் – ஆனால்

நான் பின்பற்ற மாட்டேன்.

 

அன்பு

விதிகளை வகுப்பேன்

விதிகளை ஏற்பேன்

சூழ்நிலைகளுக்கு

ஏற்றார் போல்

தளர்வுகள் அளிப்பேன்

எல்லோருக்கும் பொதுவான

வழிமுறைகளையே

நானும் பின்பற்றுவேன்.

 

ஈகோ

நான்

எப்பொழுதும்

உயரத்திலே இருக்கவேண்டும்

என்னை யாரும்

தொடாத உயரத்தில் 

எப்பொழுதுமே இருக்கவேண்டும்

என்றெண்ணியே இருப்பேன்.

 

அன்பு

எல்லோரும்

உயரத்தில் இருக்கவேண்டும்.

என்னை எல்லோரும்

தொடும் உயரத்தில் இருக்கவேண்டும்

எப்பொழுதும்

என்னருகிலேயே இருக்கவேண்டும்

என்றெண்ணியே வாழ்வேன்.

 

ஈகோ

தெரிந்தே தவறு செய்வேன்

என்னை யாரும்

கேள்வியே கேட்கக்கூடாது.

தவறுகளையும்

திருத்திக்கொள்ள மாட்டேன்.

அறிவுரை வழங்கினால்

அவர்களை

அசிங்கமாக திட்டுவேன்

அடங்கமாட்டேன்.

 

அன்பு

தவறு என்று தெரிந்தால்

மீண்டும் நிகழாதவாறு

பார்த்துக்கொள்வேன்.

தவறை திருத்திக்கொள்வேன்

யாருடைய மனதையும்

புண்படுத்த மாட்டேன்.

அறிவுரைகளை ஏற்பேன்.

 

ஈகோ

உயர்ந்தவர் யாரும் இருக்கக்கூடாது

பொறாமைக்குணம் மட்டுமே

என்னுள் நிலைத்திருக்கும்.

அடுத்தவரின் வளர்ச்சி

பிடிக்கவே பிடிக்காது…!

 

அன்பு

பொறாமைக் குணம்

இல்லவே இல்லை

அன்பு மட்டுமே நிறைந்திருக்கும்

பிறரின் வளர்ச்சியைக் கண்டும்

ஆனந்தமடைவேன்.

 

ஈகோ

நல்லாவே

நடிக்கத்தெரியும்.

தேவைக்கு ஏற்பவே

சிரிக்கும், அழுவும்,

மிரட்டவும் செய்வேன்.

தேவைப்பட்டால்

தன்னைத்தானே

மாய்த்துக்கொள்ளுவேன் - என்ற

கொலைமிரட்டல் விடும்.

அக்கொலைக்கும்

நீ தான் காரணம் காட்டி

பயமுறுத்துவேன்

உன்னால் தான்

நிகழ்ந்ததென்று

கட்டுக்கதைவிடுவேன்.

தனக்குள்ளே போலியான

முகமூடியை அணிந்துகொண்டு

நல்லவன் (ள்) போல்

உலா வருவேன்.

 

அன்பு

எனக்கோ

நடிக்கவே தெரியாது.

தேவைக்கு ஏற்ப

முகமூடி போடத்தெரியாது.

உள்ளது உள்ளபடியே

ஏற்றுக்கொள்ளும்

மனபக்குவத்தோடு இருப்பேன்.

யாரையும் மிரட்டவோ

காரணம் காட்டவோ மாட்டேன்.

தன்னம்பிக்கையோடு

செயல்படுவேன்.

 

ஈகோ

மற்றவர்களின் மேல்

எளிமையாக

குற்றம் சுமத்திவிடுவேன்.

அக்குற்றத்தில் அவர்கள்

மீளவே முடியாத அளவிற்கு

பழிகளையும் பழிச்சொற்களையும்

சுமத்திக்கொண்டே இருப்பேன்.

வலிகளை சுமக்கச்செய்வேன்.

வழிகளை உரைக்கமாட்டேன்.

 

அன்பு

எந்த ஒரு நபரின் மீதும்

குற்றம் சுமத்த மாட்டேன்

குற்றம் சுமத்தியவர்களையும்

காட்டிக்கொடுக்க மாட்டேன்.

பழியை தன்மேல் சுமத்திக்கொண்டு

அதன் வழி(லி)களை

தனக்குத் தானே சுமந்துகொள்வேன்.

 

ஈகோ

எல்லோரையும்

கால் பந்துபோல்

உதைத்து உதைத்து

விளையாடுவேன்.

அடிமேல் அடி

கொடுப்பேன்.

 

அன்பு

யாரையும்

உதைக்கமாட்டேன்

அடிமேல் அடியும்

அடிக்கமாட்டேன்.

 

ஈகோ

அன்பே

உன்னையும்

நான் பயன்படுத்துவேன்

அதுவே உனக்குத் தெரியாது.

 

அன்பு

ஈகோவே

நீ என்னை

பயன்படுத்துகின்றாய்

என்பதையும் நான் அறிவேன்.

நீ என்னை பயன்படுத்துவாய் – ஆனால்

நான் உன்னை பயன்படுத்தமாட்டேன்.

நான் உன்னை பயன்படுத்தினால்

நீ நீயாக இருக்கமாட்டாய்

நீ

நாமாகவே

மாறியே போவாய்.

 

ஈகோ

பிறரிடம் குற்றங்களையே

காண்பேன் – அல்லது

புதிய புதிய குற்றங்களையே

உருவாக்குவேன்.

 

அன்பு

யாரிடத்திலும்  குறையே,

குற்றங்களையோ கூறமாட்டேன்

அனைவரிடத்திலும்

நிறைகளை மட்டுமே காண்பேன்.

 

ஈகோ

நான் யாருடைய

சொல்லையும் பேச்சையும்

கேட்கவேண்டிய அவசியமில்லை…!

அதன்படி

நடக்கவேண்டும்

என்ற கட்டாயமும்

எனக்கில்லை…!

 

அன்பு

அனைவரின்

சொல்லுக்கும் பேச்சுக்கும்

மதிப்பளிப்பேன்

யாருடைய மனதையும்

காயப்படுத்தமாட்டேன்.

 

ஈகோ

நான் ஒரு

விதியை வகுப்பேன்

அதையே எல்லோரையும்

கண்டிப்போடு

பின்பற்ற செய்வேன் – ஆனால்

நான் பின்பற்ற மாட்டேன்.

 

அன்பு

விதிகளை வகுப்பேன்

விதிகளை ஏற்பேன்

சூழ்நிலைகளுக்கு

ஏற்றார் போல்

தளர்வுகள் அளிப்பேன்

எல்லோருக்கும் பொதுவான

வழிமுறைகளையே

நானும் பின்பற்றுவேன்.

 

ஈகோ

நான்

எப்பொழுதும்

உயரத்திலே இருக்கவேண்டும்

என்னை யாரும்

தொடாத உயரத்தில் 

எப்பொழுதுமே இருக்கவேண்டும்

என்றெண்ணியே இருப்பேன்.

 

 

அன்பு

எல்லோரும்

உயரத்தில் இருக்கவேண்டும்.

என்னை எல்லோரும்

தொடும் உயரத்தில் இருக்கவேண்டும்

எப்பொழுதும்

என்னருகிலேயே இருக்கவேண்டும்

என்றெண்ணியே வாழ்வேன்.

 

ஈகோ

நான் உனக்கு அதைச்செய்தேன்

இதைச் செய்தேன்  - என்று

சொல்லி சொல்லி காண்பித்து

பிறரின் மனதைக் காயப்படுத்துவேன்.

 

அன்பு

நான் எதையும் சொல்லிக்

காண்பிக்கும் பழக்கம்

என்னிடத்தில் இல்லை.

எதுசெய்தாலும் அதை

அப்பொழுதுதே மறந்துவிடுவேன்.

யாருடைய

 மனதையும் காயப்படுத்துவதில்லை.

 

ஈகோ

நான் பொய்ச்சொல்வதையே

வழக்கமாக வைத்திருப்பேன்

நேரம் காலம் எனக்குத்

தெரியாது…

எனக்கு பெறவேண்டியதை

நான் எப்படிவேண்டுமானாலும்

அடைந்தே தீருவேன்.

 

அன்பு

பொய்ச்சொல்லவே தெரியாது

எதையும் நிதானத்தோடு

அடையவேண்டியவற்றை

அடைவேன்.

உண்மையை மட்டும்

எடுத்துரைப்பேன்

கிடைக்கவேண்டியது

கிடைத்தால் போதும்

என்றெண்ணியே இருப்பேன்.

 

ஈகோ

எனக்கு கீழ் இருக்குறவுங்களாம்

என் வேலையாட்களாகவே பார்ப்பேன்.

அவர்களில்

என் உடன் பிறப்புகளாகவே

இருந்தாலும் என் குணத்தை

மாற்றிக்க மாட்டேன்.

அவர்களையும் வேலையாட்களாகவே

கருதுவேன்.

 

அன்பு

நான் யாரையும்

வேலையாட்களாக

நினைப்பதில்லை. – மாறாக

அவர்களை எல்லாம்

சகமனிதர்களாகவே கருதுவேன்.

 

 

 

 

 

 

ஈகோ

தன்னைச் சார்ந்தவர்களுக்கு

ஒரு பிரச்சனை என்றால்

எதுவும் தெரியாத மாதிரி

ஒதுங்கிவிடுவேன்.

அப்பிரச்சனை என்னவென்றே

கண்டுக்கொள்ள மாட்டேன்.

 

அன்பு

தன்னைச் சார்ந்தவர்களுக்காக

எதையும் செய்வேன்.

பிரச்சனை என்று தெரிந்தால்

முன்னமே வந்து உதவுவேன்.

அப்பிரச்சனை முடியும் வரை

அவர்கள் கூடவே இருப்பேன்.

 

ஈகோ

எதையும் ஏற்றுக்கொள்ளும்

மனபக்குவம் கிடையாது

யார் எதை சொன்னாலும்

அதை ஏற்க மாட்டேன்.

எதையும்

என் விருப்படித்தான்

செய்வேன்.

அது நன்மையோ

தீய்மையோ

எதுவானாலும்

நான் நான் எடுக்கும்

முடிவைமட்டுமே

சார்ந்திருப்பேன்.

தீய்மையோ, தோல்வியோ

முழுமையாக ஏற்கமாட்டேன்.

அதைத் தாங்கிக்கொள்ளும்

வலிமை என்னிடத்தில் இருக்காது.

 

அன்பு

எதையும் ஏற்றுக்கொள்ளும்

மனபக்குவம் உண்டு.

அனைவரின் ஆலோசனை பெற்று

அதற்கு ஏற்றார் போலவே

நடந்துகொள்வேன்.

என்னிடத்தில்

அகங்காரம், ஆணவம்

என்பதே கிடையவே கிடையாது.

நான் எடுக்கும் முடிவில்

பிறரின் நன்மை மட்டுமே கலந்திருக்கும்.

தோல்வியோ, தீய்மையோ

ஏற்பட்டால் – அதை

தாங்கிக்கொள்வதற்கும்

ஏற்றுக்கொள்வதும்

என்னிடத்தில் ஏராளமான

மன வலிமை உண்டு.

 

 

 

 

 

 

கம்பராமாயணம் அயோத்தியா காண்டம் -  குகப்படலம் கம்பராமாயணத்தின் குகப்படலம் இங்கே பாடமாக வைக்கப்பட்டுள்ளது .   குகப்படலம் வனம் ப...