கம்பராமாயணம்
அயோத்தியா காண்டம் - குகப்படலம்
கம்பராமாயணத்தின் குகப்படலம் இங்கே பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
குகப்படலம்
வனம் புகுந்த இராமன் குகனைத் தோழமை கொண்ட செய்தியை உணர்த்தும் பகுதியை விவரிப்பதே குகப்படலம் ஆகும்.
குகனின் அறிமுகம்
ஆய காலையின்,
ஆயிரம் அம்பிக்கு
நாயகன்,
போர்க் குகன் எனும் நாமத்தான்,
தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்,
காயும் வில்லினன்,
கல் திரள் தோளினான். 1